ஒருநாள் தூதர்: இந்தியப் பெண்ணுக்கு மரியாதை!


ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்களின் ஆதிக்கத்துக்கு மத்தியில் பெண் கல்வி, பெண் சமத்துவம் போன்றவற்றுக்காகப் பாடுபடும் கிராமத்துப் பெண், ஒரு நாள் ஆஸ்திரேலிய உயர் தூதராக பதவி வகித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரி சிங். 22 வயதான இவர் நக்சலைட் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் வாழும் பெண் குழந்தைகளின் கல்வி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் அதிகாரத்துக்காகச் சேவையாற்றி வருகிறார். இது ஊடகங்கள் மத்தியில் கவனம் பெற்றது. பெண்கள் ஆபத்தான சூழ்நிலைகளில் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும், என்னென்ன யுக்திகளைக் கையாள வேண்டும், இதற்காக உருவாக்கப்பட்டுள்ள அவசர எண்கள் என்னென்ன என்பது உள்ளிட்ட தகவல்களைக் கல்வியறிவு பெறாத, விளிம்பு நிலைப் பெண்களுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறார்.

டெல்லியில் உள்ள 17 நாடுகளின் தூதரகத்தில், ஒருநாள் உயர் தூதராக பதவியாற்றும் வாய்ப்பு சமீபத்தில் பாரிக்குக் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாரி சிங், ஆஸ்திரேலிய உயர் தூதராக ஒரு நாள் பணியாற்றினார். ஊர் திரும்பிய பாரிக்கு, அவ்வூர் மக்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இது குறித்து பாரி சிங் கூறுகையில், ஒருநாள் ஆஸ்திரேலிய உயர் தூதராகப் பணியாற்றியது தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாகக் கூறினார். “என் கிராமத்தில் உள்ள மற்ற குழந்தைகளையும் ஊக்குவித்து, கல்வியில் ஆர்வம் பெற உந்துதலாக இருப்பேன். சரியான கல்வி மூலம், நக்சைலைட் மற்றும் அவர்களின் நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராட முடியும். ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி வழங்க வேண்டும்; அதன்மூலம் சரி எது, தவறு எது என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியும். மக்கள் தங்கள் உரிமைகளை அறிந்துகொள்ள கல்வி முக்கியமான ஒன்றாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...