தேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...!!

தேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், ஏப்., 18ல், தேர்தல் நடக்கிறது. இதற்கான கண்காணிப்பு பணியில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில், மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில், மூன்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 16 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த பணியில், 24 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்கள்
ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட மறுக்கும், முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. தேர்தல் உயரதிகாரி, ஒருவர் கூறியதாவது: மக்கள் பிரிதிநிதித்துவ சட்டப்படி, தேர்தல் பணிக்கு வர மறுக்கும் அலுவலர்கள் மற்றும் பணியில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை மட்டுமின்றி வழக்குப்பதிவு செய்து, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படஇருக்கிறது. பொதுவாகவே, நடத்தை விதிகள் அமலுக்கு வந்த உடன், தேர்தல் ஆணையத்தின் கீழ் அலுவலர்கள் வந்துவிடுகின்றனர். அதனால், உரிய விதிகளின் படி, தகுந்த காரணங்களுக்காக, தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே விடுப்பு வழங்க வழி வகை இருக்கிறது.அந்த குற்றச்செயல், சம்பந்தப்பட்ட அலுவலர்களின் பணிப்பதிவேடில் கட்டாயம் பதிவு செய்யப்பட்டு விடும். இதனால், அந்த அலுவலர்களின் பல்வேறு சலுகைகள்பாதிக்கப்படும். மேலும், தீவிர விசாரணைக்கு பின், குறிப்பிட்ட அலுவலர்கள் மீதான வழக்கை ரத்து செய்யும், அதிகாரம், தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே இருக்கிறது. அதனால், தேர்தல் அலுவலர்கள் உரிய முறையிலும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...