கேரளா மாநிலத்தில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றில் கட்டணம் செலுத்தாத இரண்டு மாணவர்களை பள்ளி நிர்வாகம் இரண்டு மணி நேரம் வெயிலில் நிற்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதில், ஒரு சிறுவன் கண்பார்வை குறைபாடு உடையவர் என்பது மேலும் அதிர்ச்சியளிப்பதாகஉள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது குழந்தைகள் உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஆலுவ பகுதிக்கு அருகேயுள்ள கருமாலூரில் உள்ள அந்தப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவர்களுக்கு, சமீபத்திய கட்டண ஈவுத் தொகை செலுத்தப்படவில்லை. இதனால், பள்ளி நிர்வாகம் அவர்களை ஏற்கெனவே தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.
அதே சமயம், மாணவர்களையும் வெயிலில் நிற்க வைத்து தண்டித்ததாக கேரள ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதன் அடிப்படையில் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று குழந்தைகள் உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித்துறையிடம் இருந்தும் அறிக்கை கோரப்பட்டுள்ளது. இதற்கிடையே, மனித உரிமை ஆணையமும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளது.