வெள்ளச் சேதம்: மத்தியக் குழு இன்று முதல் ஆய்வு!

வெள்ளச் சேதத்தைப் பார்வையிட தமிழகத்துக்கு வியாழக்கிழமை வரவுள்ள மத்தியக் குழுவினர், சென்னையில் தங்களது பணியைத் தொடங்கவுள்ளனர்.
 வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட
பாதிப்புகளைச் சீரமைக்க ரூ.8,481 கோடி நிதி தேவை என மத்திய அரசை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மேலும், உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடி தேவை எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே, இடைக்கால நிவாரணமாக ரூ.939.63 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
 மத்தியக் குழு ஆய்வு: தமிழகத்தில் பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் கோரிக்கையை ஏற்று, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் குழுவை அமைத்துள்ளது.
 இந்தக் குழுவில் மத்திய வேளாண்மைத் துறை கூடுதல் ஆணையாளர் ஒய்.ஆர்.மீனா, நிதித் துறை செலவினங்கள் துறை இணை இயக்குநர் எம்.எம்.சச்தேவா உள்ளிட்ட 8 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் வியாழக்கிழமை காலை சென்னை வரவுள்ளனர்.
 சென்னை-கடலூரில் ஆய்வு: மத்தியக் குழுவில் மொத்தம் 9 பேர் அடங்கியுள்ளனர். இந்தக் குழுவினர் முதலில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வியாழக்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதன்பின், வெள்ளிக்கிழமையன்று கடலூர் சென்று பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட உள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 தலைமைச் செயலர் ஆலோசனை: தமிழகத்துக்கு மத்திய குழுவினர் வரவுள்ள சூழ்நிலையில், அனைத்துத் துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் புதன்கிழமை மாலை ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையாளர் அதுல்ய மிஸ்ரா உள்பட முக்கியத் துறைகளின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
 மூன்று நாள்கள் ஆய்வு: மத்தியக் குழு வியாழக்கிழமை பணியைத் தொடங்கவுள்ளது.இந்தக் குழு, மூன்று நாள்கள் வரை மழை பாதிப்புகளை ஆய்வு செய்யும் என்று தெரிகிறது. இதன்பின், அரசுத் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தனது ஆய்வறிக்கையை குழு அளிக்கும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...