வணிக வரித்துறைஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'

அரசு பேச்சில் உடன்பாடு ஏற்படாததால், வணிக வரித்துறை ஊழியர்கள், இன்று முதல் காலவரையற்ற, 'ஸ்டிரைக்'கில் ஈடுபடுகின்றனர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வணிக வரித்துறை ஊழியர்கள், ஜன., 18, 19ல், விடுப்பு போராட்டம் நடத்தினர். இரண்டு நாட்களாக, சங்க நிர்வாகிகள் சென்னையில், உண்ணாவிரதம் இருந்து
வருகின்றனர்.
சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் சம்பத், துறை உயர் அதிகாரிகள், நேற்று பேச்சு நடத்தினர். பணி மூப்பு குளறுபடிக்கு தீர்வு காண்பதில் உறுதியான முடிவை அறிவிக்காததால், பேச்சு தோல்வியில் முடிந்தது.
இதனால், அதிருப்தி அடைந்த ஊழியர் சங்கங்கள், இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக் அறிவித்துள்ளன. 6,000 பேர் இதில் பங்கேற்பதால், வரி வசூல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...