பாடம் நடத்தும்படி கூறுவதற்கு சத்துணவு ஊழியர் சங்கம் எதிர்ப்பு !

பள்ளியை திறந்து பாடம் நடத்தும்படி அதிகாரிகள் கூறுவதற்கு சத்துணவு ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 30ம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்தி வருகிறது. பிப்., 1ம் தேதி அனைத்து பள்ளிகளையும் மூடி மறியல் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது.



போராட்டத்தால் பள்ளிகள் பாதிக்கப்படாமல் வழக்கம் போல் செயல்பட கல்வித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சில ஊர்களில், சத்துணவு அமைப்பாளர்களிடம், பிப்., 1ம் தேதி பள்ளியை திறந்து, மாணவர்களுக்கு பாடம் நடத்தும்படி தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் இந்த முயற்சிக்கு சத்துணவு ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இன்னாசி முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்., 1ம் தேதி பள்ளி திறந்திருந்து, மாணவர்கள் வந்திருந்தால், சத்துணவு ஊழியர்கள், உணவு சமைத்து வழங்குவர். ஆசிரியர்களுக்கு பதில் பள்ளியை திறந்து, பாடம் நடத்தும் பணியில் சத்துணவு ஊழியர்கள் ஈடுபட மாட்டார்கள்.சத்துணவு ஊழியர்கள் சங்கம் வரும், 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளோம் என, தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...