பாஸ்வேர்டை திருடும் புதிய வைரஸ் 'டார்க்பாட்'! எச்சரிக்கை தேவை

சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் சுயவிவரங்களையும், பாஸ்வேர்டையும் திருடும் புதிய வைரஸ், இன்டர்நெட்டில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து இன்டர்நெட்வழிக் குற்றங்களுக்கான தடுப்பு அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கையாவது : விண்டோஸ் ஓ.எஸ்.,ஐ குறிவைத்து 'டார்க்பாட்'(dorkbot) எனும் புதிய வைரஸ் இன்டர்நெட்டில் தற்போது உலவி
வருகிறது. இந்த வைரஸ் இன்டர்நெட் வழியாக டவுண்லோடு செய்யப்படும் பைல்கள், அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்வது வழியாகவும், பேஸ்புக், டிவிட்டர், ஸ்கைப் போன்ற சமூக வலைதளங்கள் வழியாகவும், இன்டர்நெட் வழியே நடைபெறும் சாட்டிங் வழியாகவும் மறைமுகமாக கம்ப்யூட்டருக்கு வந்தடைகின்றன. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான கம்ப்யூட்டர்களில் உள்ள பாஸ்வேர்டுகள், சுயவிவரங்கள், டவுன்லோட் ஹிஸ்டரி, வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவை எளிதில் திருடப்பட்டு மோசடி செயல்களுக்கு உட்படுத்தப்படுகின்றன.
சந்தேகத்துக்குரிய அக்கவுண்ட்களிலிருந்து வரும் எஸ்.எம்.எஸ்.,கள், மற்றும் மெயில்களை திறந்து பார்க்க வேண்டாம் எனவும், மற்றவர்களுக்கு அதை பார்வேர்டு பண்ணவேண்டாம் எனவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...