வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனுக்கள் குவிகின்றன! பிரதான அரசியல் கட்சிகள் கலக்கம்!

9 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 10,222 பேர் விண்ணப்பித்துள்ளனர். புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அவர்கள் யாருக்கு சாதகமாக ஒட்டளிப்பார்கள் என பிரதான அரசியல் கட்சிகள் கலக்கத்தில் உள்ளன.
தமிழக சட்டசபை தேர்வில் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
அதனையொட்டி இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி 20ம் தேதி வெளியிட்டது. கடலுார் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகளின் வாக்காளர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 94 ஆயிரத்து 357 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் பட்டியலில் பலரது பெயர் விடுபட்டுள்ளதாகவும், இறந்தவர்கள் மற்றும் இடம் மாறியவர்களின் பெயர் நீக்கப்படாமல் உள்ளதாக புகார் எழுந்தது.

இதே குற்றச்சாட்டு மாநிலம் முழுவதும் எழுந்தது. அதனையொட்டி தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் கடந்த 21ம் தேதி முதல் 30ம் தேதிவரை பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக சட்டசபை தொகுதி வாரியாக ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் நேரடியாகவும், ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

நேற்று முன்தினம், அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
அதில் கடலுார் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பாக 13 ஆயிரத்து 202 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

பெறப்பட்ட விண்ணப்பங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும் விண்ணப்பங்களை ஓட்டுச் சாவடி நிலைய அலுவலர்கள் வீடு வீடாக நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, தகுதியில்லாத விண்ணப்பங்களை நீக்கம் செய்வார்கள். தொடர்ந்து, தகுதியானவர்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டு சென்னை தேர்தல் ஆணையத்திற்கு இறுதிப் பட்டியல் தயாரித்து அனுப்பிய பிறகு, வாக்காளர் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படும். இதற்கான பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வரும் 6ம் தேதி மீண்டும் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாவட்டத்தில் வாக்காளர் எண்ணிக்கை ஓராண்டில் 60 ஆயிரம் அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், தற்போது இறுதி பட்டியல் வெளியிட்டு 11 நாள் நடைபெற்ற சுருக்கமுறை திருத்தப்பணியில் பட்டியலில் பெயர் சேர்த்திட மட்டும் 10 ஆயிரத்து 222 பேர் விண்ணப்பித்திருப்பதால், மாவட்டத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டுவது உறுதியாகியுள்ளது.

அதேநேரத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், புதிய வாக்காளர்கள் யாருக்கு சாதகமாக இருப்பார்கள் என தெரியாததால் பிரதான அரசியல் கட்சியினர் கலக்கம் அடைந்து வருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...