கல்வி நிறுவனங்களில் சம உரிமை மையம்!

பல்கலை மற்றும் கல்லுாரிகளில், இன வேறுபாடு, மாணவர் சேர்க்கையில் பாகுபாடு, விடுதியில் பாரபட்சம் போன்ற பிரச்னைகள் காணப்படுகின்றன. இதில் சில நேரங்களில், மாணவர்கள் இடையே மோதல் அல்லது தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன.

'எனவே, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அனைத்து பல்கலை மற்றும் கல்லுாரிகளில், சம உரிமை மையம் கண்டிப்பாக துவங்க வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. அதன் செயலர் ஜஸ்பால் சந்த் வெளியிட்ட அறிவிப்பில், 'தலித், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களின் குறைகளை தீர்க்க, இந்த சம உரிமை மையங்கள் செயல்பட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...