3 மணி நேரமே படித்து 99.6 சதவீத மதிப்பெண் பெற்ற புணே மாணவி...!!

சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வில் புணேவைச் சேர்ந்த மாணவி முஸ்கான் வசந்தனி 99.6 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தினமும் 3 மணி நேரம் மட்டுமே படித்து இந்தச் சாதனையைச் செய்துள்ளதாக தன்னடகத்துடன் கூறுகிறார் முஸ்கான்.
இவர் டெல்லி பப்ளிக் ஸ்கூலில் படித்து வருகிறார். படிப்புடன் சேர்ந்து பல்வேறு விளையாட்டு, கலை போன்ற
நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் முஸ்கான்.
ஒரு நாளைக்கு 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை மட்டுமே அவர் படிப்பாராம்.
இதுகுறித்து அவர் கூறுவதாவது....எனக்கு படிப்பு மிகவும் பிடிக்கும். இந்த அளவுக்கு மதிப்பெண்கள் பெறுவேன் என்று நினைக்கவில்லை. தினமும் ஆசிரியர் நடத்தும் பாடங்களைப் படித்து விடுவேன். 3 மணி நேரம் படிப்பேன்.


மேலும் டியூஷன் என்று நான் எங்கு சென்றும் படிக்கவில்லை. எனது படிப்புக்கு எனது தாய் உறுதுணையாக இருந்தார். எனது ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், பள்ளி முதல்வர் ஆகியோர் எனது வெற்றிக்குக் காரணம்.
அவ்வளவுதான். பிளஸ்2விலும் அதிக மதிப்பெண் பெறவேண்டும். அதுதான் எனது ஆசை என்கிறார் முஸ்கான்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...