இந்தியாவின் உச்ச கட்ட வெப்பம் 52.4 டிகிரி செல்சியஸ் (126.32 டிகிரி பாரன்ஹீட்) !

நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெப்பம், தலைநகர் டில்லியையும் விட்டு வைக்கவில்லை. வழக்கமாக நிலவும் வெப்ப நிலையை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்து காணப்படுகிறது. இன்று 43.4 டிகிரி செல்சியசாக வெப்பம் பதிவானது. இந்த கோடை காலத்தில் அதிகபட்ச வெப்ப நிலை இது.


நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநில எல்லையில் உள்ள ஜெய்சல்மீர் நகரில் 52.4 டிகிரி செல்சியஸ் (126.32 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் பதிவானது. பலோடி என்ற இடத்தில் 46.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதனை தொடர்ந்து ஸ்ரீ கங்கா நகர் 46.3 டிகிரி செல்சியஸ், சூரு என்ற இடத்தில் 46 டிகிரி செல்சியஸ், பிகாநீரில் 45.8 டிகிரி செல்சியஸ் பார்மரில் 45.2 டிகரி செல்சியஸ், ஜெய்பூரில் 43.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் 45.1 டிகிரி செல்சியசும், அரியானா மாநிலம் ஹிசாரில் 44.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் 42.3 டிகிரி வெப்பநிலை பதிவானது. இது வழக்கத்தை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகம்.


இந்தியாவின் கிழக்குப்பகுதியான வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கவில்லை. ஜாம்ெஷட்பூரில் 44.2 டிகிரி செல்சியசும், பலமுவில் 43.8 டிகிரி செல்சியசும், கார்வா என்ற இடத்தில் 43 டிகிரி செல்சியசும், ராஞ்சி மற்றும் லோஹர்தாகாவில் 40 டிகிரி செல்சியசும் பதிவானது.


மேற்க வங்க தலைநகர் கோல்கட்டாவில் 40.1 டிகிரி செலசியஸ் வெப்பம் பதிவானது. இங்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பீகாரில் பல இடங்களில் வெப்பம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கயாவில் 42.9 டிகிரி செல்சியசும், பாட்னாவில் 40.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது.


கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இங்கு மே 20ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படக்கூடாது என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இங்கு வெயில் காரணமாக 2 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.


தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி: வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சேலத்தில் 41.2 டிகிர செல்சியஸ், தர்மபுரியில் 40.8 டிகிரி செல்சியஸ், வேலூரில் 41.1 டிகிரி செல்சியஸ், மதுரை 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாகவும் கூறியுள்ளது. மேலும், மே 5ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் துவங்க உள்ளதாகவும் கூறியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...