இடைநிலைஆசிரியர் பதவி உயர்வு ஊதியம் நிர்ணயிப்பதில் கல்வித்துறை புது உத்தரவு!

இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்று ஊதியம் நிர்ணயிக்கும்போது, தனி ஊதியம் ரூ.750 யையும் சேர்த்து கணக்கிட வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியமாக ரூ.750வழங்கப்படுகிறது.


 மேலும் அவர்கள் பட்டதாரி ஆசிரியர்,தொடக்கப் பள்ளி தலைமைஆசிரியராக பதவி உயர்வு பெறும்போது,ஊதியம் நிர்ணயிப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

சில உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தவறாக ஊதியம் நிர்ணயிப்பதால் இயக்குனரகத்திற்கு தொடர்ந்து புகார் சென்றப்படி உள்ளன. இந்த குழப்பத்திற்கு தற்போது தொடக்கக் கல்வித்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.இடைநிலை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்,தொடக்கப் பள்ளிதலைமைஆசிரியராக பதவி உயர்வு பெற்று,ஊதியம் நிர்ணயிக்கும்போது தனி ஊதியம் ரூ.750யையும் சேர்த்து கணக்கிட வேண்டும்.

மேலும் தனி ஊதியத்தை ஆண்டு ஊதிய உயர்வு,அகவிலைப்படி,ஓய்வூதியத்திற்கும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.2011ஜன., 1க்கு பின் தேர்வுநிலை பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்துடன்3சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.தர ஊதியத்தில் மாற்ற செய்ய கூடாது. தொடர்ந்து தனி ஊதியமும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு தொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...