தமிழ் மொழியிலும் பிரதமரின் இணையதளம் !

பிரதமர் அலுவலக இணையதளம் தற்போது ஆங்கிலம், தமிழ் , மலையாளம், தெலுங்கு, இந்தி, வங்கம், மராத்தி, குஜராத்தி மொழிகளிலும் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது. இந்த
இணையதளத்தை வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் துவக்கி வைத்தார்.



http://www.pmindia.gov.in என்ற பிரதமர் இணையதளம் இது வரை ஆங்கிலத்தில் மட்டுமே இருந்து வந்தது. இணையத்தில் புரட்சி ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். அனைத்தும் கம்ப்யூட்டர் மயம் என்பதைவிட அனைத்து நிர்வாக செயல்பாடுகளையும் நெட் உலகமாக மாற்ற விரும்புகிறார். இதனால் அவர் அனைத்து காரியங்களையும் எளிமைபடுத்த முடியும் என்றும் சாதாரண கடைக்கோடி மக்களும் விரைவில் பயன்பெற முடியும் என்று நம்புகிறார். இதனால் எந்த பணிகள் இருந்தாலும் அவர் நினைக்கும் விஷயங்களை உடனுக்குடன் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிரம், வாட்ஸ்அப், மூலம் மக்கள் கருத்துக்களை பகிர அழைப்பு விடுத்து வருகிறார். இதற்கும் மேலாக அவரது பெயரில் மொபைல் ஆப் தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறார்.


இந்நிலையில் பிரதமர் அலுவலக இணையதளம் பல்வேறு மொழிகளில் ஆக்கம் செய்ய ஆணையிட்டார். இதன்படி ஆங்கிலம், தமிழ் , மலையாளம், தெலுங்கு, இந்தி, வங்கம், மராத்தி, குஜராத்தி மொழிகளிலும் மாற்றப்பட்டுள்ளது. வழக்கமான ஆங்கில மொழியை காட்டிலும் அவரவர் பிராந்திய மொழிகளிலும் படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மொழி தேர்வு செய்யும் காலத்தில் தமிழுக்கு 3வது இடத்தை கொடுத்துள்ளார். மேலும் பிரதமருக்கு மக்கள் நினைக்கும் கருத்துக்களை அவரவர் மொழிகளில் அனுப்பி வைக்கவும் ஆப்சன் வழங்கப்பட்டுள்ளது. நாட்டு நலன் மற்றும் வளர்ச்சி தொடர்பான விஷயங்கள் குறித்தும் கருத்துக்களை அனுப்பி வைக்க முடியும். பிரதமருக்கு நேரிடையாக போய்ச்சேரும். நாம் கேள்வி கேட்கவும் வசதிகள் உள்ளன. தமிழ் மொழி இணையதளம் பார்க்க; http://www.pmindia.gov.in/ta/# கிளிக் செய்யவும். இந்த இணையதளம் இன்று முதல் செயலுக்கு வந்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...