பிரதமர் மோடி என்ன படித்துள்ளார் ?

பிரதமர் மோடி குஜராத் பல்கலையில் எம்.ஏ., பட்டம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில், குஜராத் பல்கலையில் எம்.ஏ., பொலிடிக்கல் சயின்ஸ் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார் என கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த பல்கலைக்கழகத்தில் இருந்து
கிடைக்கப்பட்ட தகவலின்படி, மோடி சிறந்த மாணவர், அரசியல் அறிவியலில் 1983ம் ஆண்டு 62.3 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதுல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார் . ஐரோப்பிய அரசியல், இந்திய அரசியல் பகுப்பாய்வு மற்றும் அரசியல் உளவியல் அடங்கிய பாடங்கள் அடங்கிய 2 வருட பட்டப்படிப்பை முடித்துள்ள பிரதமர் மோடி எம்.ஏ.,, முதலாம் ஆண்டில், 400 மதிப்பெண்களுக்கு 237 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 2வது ஆண்டில், 400 மதிப்பெண்களுக்கு 262 மதிப்பெண்களும்,3 ம் ஆண்டில், 800 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்களும் பெற்றுள்ளார் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...