சம்பளம் உயராவிட்டால் ரயில்கள் ஓடாது: கண்ணையா

''அடிப்படை சம்பளம், 26 ஆயிரம் ரூபாய் வழங்க மறுத்த, மத்திய அமைச்சரவை முடிவை எதிர்க்கிறோம்; திட்டமிட்டபடி, வேலைநிறுத்தத்தில் இறங்குவோம்,'' என, தெற்கு ரயில்வே மஸ்தூர் சங்க பொதுச் செயலர் கண்ணையா கூறினார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: அடிப்படை சம்பளத்தை, 26 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது எங்களது கோரிக்கை; இது,
நிராகரிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே உள்ள அடிப்படை சம்பளத்தை, மூன்று மடங்கு உயர்த்தி, 21 ஆயிரம் ரூபாய் வரை தர முன்வந்திருக்க வேண்டும். இதற்கு அமைச்சரவை முன்வரவில்லை.
மேலும், ரயில்வேயில் முழு தனியார்மயம் கூடாது என்ற கோரிக்கை குறித்தும் பரிசீலிக்கவில்லை. இதை எதிர்த்து, இன்று முக்கிய ரயில் நிலையங்கள், பணிமனைகள், அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி அறிவிக்காவிட்டால், ஜூலை, 11ம் தேதி காலை, 6:00 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்குவோம்; ரயில்கள் ஓடாது. இவ்வாறு அவர் கூறினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...