தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி அதிகரிப்பு ஒளிமயமான எதிர்காலம்! 40 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு !

தகவல் தொழில்நுட்பத்துறை (ஐ.டி) ஏற்றுமதி, 12 ஆயிரம் கோடி ரூபாயாகவும், வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்கள் எண்ணிக்கை, 40 ஆயிரமாகவும்

அதிகரித்துள்ளது.


தொழில் நகரமான கோவையில் ஐ.டி., படித்த மாணவர்கள் பயன் பெறும் வகையில், அரசு மருத்துவ கல்லுாரிக்கு பின்புறம், விளாங்குறிச்சி ரோடு அருகே, தமிழக அரசு சார்பில், 'டைடல் பார்க்' அமைக்கப்பட்டுள்ளது. தவிர சரவணம்பட்டி, கீரணத்தம், பொள்ளாச்சி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் சார்பில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (எஸ்.சி.இசட்.,) செயல்படுகின்றன.

தடையில்லா மின்சாரம், தண்ணீர் வசதி, ஏ.சி., அதிக பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் கொண்டுள்ளன. தவிர இங்கு தொழில் துவங்கும் உள்நாடு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகர சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.

'ராபர்ட் போஷ்', 'டெல்', 'விப்ரோ', சி.டி.எஸ்., உள்ளிட்ட முன்னணி ஐ.டி., நிறுவனங்கள் உள்பட பல ஐ.டி., நிறுவனங்களும் கோவையில் செயல்பட துவங்கியுள்ளன. எட்டு தளங்களை கொண்டுள்ள கோவை 'டைடல் பார்க்' வளாகத்தில், 12 ஆயிரம், சரவணம்பட்டி, கீரணத்தம் தனியார் நிறுவனங்களில் 25 ஆயிரம், இதர பகுதிகளில் செயல்படும் நிறுவனங்களில், 3 ஆயிரத்துக்கும் மேல் என, 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

நடப்பாண்டு, ஆகஸ்ட் வரை கோவை நகரின் ஐ.டி., ஏற்றுமதி, 12 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 'ஜாப் ஆர்டர்'கள் சீராக உள்ளதால் எதிர்வரும் நாட்களில் ஏற்றுமதியும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றுமதி அதிகரிப்பு

இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) தலைவர் (ஐ.டி., பிரிவு) அசோக் கூறுகையில், ''கோவை நகரம் ஐ.டி., துறையில் சிறப்பான வளர்ச்சி பெற்று வருகிறது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி, 38 சதவீதம் அதிகரித்துள்ளது.

''இதில் தனியார் சிறப்பு பொருளாதார மண்டலங்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது. வரும் நாட்களில், மேலும் பல புதிய நிறுவனங்கள் கோவைக்கு வர ஆர்வம் தெரிவித்துள்ளன. இதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள், குறிப்பாக ரோடு வசதியை மேம்படுத்த வேண்டும்.

''சர்வதேச விமான போக்கு

வரத்து வசதிகளை அதிகரிக்க

வும் நடவடிக்கை எடுக்க வேண் டும்,'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...