நடப்பாண்டு, 6.21 லட்சம் பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் !

நடப்பாண்டு, 6.21 லட்சம் பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 11ம் வகுப்பு படிக்கும், பிற்படுத்தப்பட்டோர்,
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு, ஆண்டுதோறும் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில், 2014 - 15ம் ஆண்டு, 4.23 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்க, 148.82 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில், 1.70 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. நடப்பாண்டு, ஆதிதிராவிட மாணவ, மாணவியரையும் சேர்த்து, 3.49 லட்சம் மாணவியர்; 2.71 லட்சம் மாணவர்கள் என, மொத்தம், 6.21 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...