வீடுகளை இனி ஏலத்தில் விற்கலாம் !

ஏலத்தின் மூலமாக வீடுகளை விற்பனை செய்யும் முறை இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்டுள்ளது. பொதுவாக பயன்படுத்திய பழைய வீடுகளையோ அல்லது தொழிலுக்காக புதிய வீடுகள் கட்டி அவற்றை விற்பனை செய்வதற்கோ இடைத்தரகர்களையே பயன்படுத்தி வருகின்றனர். இதில்
வருவாய் கிடைத்தாலும் அதில் குறிப்பிட்ட தொகை இடைத்தரகர்களுக்கு சென்று விடுகிறது. மேலும், சில நேரங்களில் எதிர்பார்த்த தொகை கிடைப்பதில்லை. இதற்கு மாறாக ஏலத்தின் மூலமாக விற்பனை செய்தால் விற்கப்படும் வீடுகளுக்குரிய உண்மையான நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட அதிகமான தொகை கிடைக்கும். எனவே, இந்தியாவில் முதன்முறையாக ‘ஆக்‌ஷன் ஹவுஸ் இந்தியா’ (Auction House India) என்ற நிறுவனம் இந்த சேவையைத் தொடங்குகிறது. இந்நிறுவனத்தை இந்தியாவின் ‘நியூ டைமன்சன் அட்வைசரி’ மற்றும் அமெரிக்காவின் ‘ஆக்சன் ஹவுஸ் யு.கே’ ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்நிறுவனத்தின் முதல்கட்ட ஏலம் டெல்லியில் நாளைய மறுநாள் (27/08/2016) நடத்தப்படவுள்ளது. இந்த ஏலத்தில் சுமார் ரூ.130 கோடி ஒட்டுமொத்த மதிப்பில் 31 வீடுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்தியாவில் முதன்முறை என்றாலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளில் ஏலத்தில் வீடுகள் விற்பனை செய்யப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். அமெரிக்காவின் ஆக்‌ஷன் ஹவுஸ் நிறுவனம் ஆண்டுக்கு 3,000 வீடுகளை சுமார் 200 ஏலங்கள் மூலமாக விற்பனை செய்து வருவதாக அதன் இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஆக்‌ஷன் ஹவுஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் சாயிஃப் நவாஸ் கூறுகையில், “அமெரிக்க நிறுவனத்துடனான இந்த கூட்டு முயற்சியின் மூலமாக இந்தியாவில் சிறந்த முறையில் அதிவேகமாக வீடுகளை வாங்கவும் விற்கவும் முடியும். டெல்லியில் தொடங்கிய இத்திட்டம் விரைவில் மற்ற இந்திய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. இரண்டாம்கட்ட ஏலத்தை வருகிற அக்டோபர் மாதம் நடத்தவுள்ளோம். பொதுவாக வீடுகளை விற்பனை செய்ய இடைத்தரகர்களை நாட வேண்டியுள்ளது. அவர், இரு தரப்பினரையும் சந்திக்க வைத்து இறுதி கட்ட விலை நிர்ணயம் செய்கிறார். இதற்கு அதிக காலமாவதோடு, வீட்டுக்குரிய விலையில் வாங்கவோ அல்லது விற்கவோ முடிவதில்லை. இந்த ஏலத்தில் வீட்டின் இறுதி விலையில் இருந்து, வீடுகளை விற்பனை செய்பவர்களிடமிருந்து மூன்று சதவிகித தொகையும், வாங்குபவர்களிடமிருந்து ஒரு சதவிகித தொகையும் மட்டுமே பெற்றுக் கொள்கிறோம். ஏலத்தில் விற்கப்படும் வீடுகள் குறித்தும் அதன் பத்திரங்கள் குறித்தும் ஆக்‌ஷன் ஹவுஸ் இணையதளத்தில் (http://www.auctionhouseindia.com) பார்க்கலாம்” என்று அவர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...