பணியிடம் மறைக்கப்பட்டதாகப் புகார்: இடமாறுதல் கலந்தாய்வில் இடைநிலை ஆசிரியர்கள் திடீர் போராட்டம் !

திருநெல்வேலி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர்களுக்காக  நடைபெறும் கலந்தாய்வில், இடைநிலை ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
     திருநெல்வேலி மாவட்ட பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும்
அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் பணியிட மாறுதலுக்காக ஒவ்வொரு தேதியில் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டை சாராள் தக்கர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் இந்தக் கலந்தாய்வில்,
செவ்வாய்க்கிழமை இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் முன்னிலையில், கணினி மூலம் உள்மாவட்ட மாறுதல் கோரும் நபர்களுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. மாறுதல் கோரி 111 பேர் வந்திருந்தனர். 33 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு பத்மநேரி அரசு உயர்நிலைப் பள்ளி, கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, பாவூர்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, தென்மலை அரசு மேல்நிலைப் பள்ளி, புளியரை அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய  5 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.
இதனை ஏற்க இடைநிலை ஆசிரியர் சங்கம் மறுத்துவிட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இதில், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, செங்கோட்டை, நெடுவயல் அச்சன்புதூர், சீவலப்பேரி, நான்குனேரி ஆகிய 7 இடங்கள் மறைக்கப்பட்டிருப்பதாகவும் புகார் கூறினர்.
மொத்தமுள்ள 11 இடங்களையும் அறிவித்து கலந்தாய்வு நடத்தினால் மட்டுமே பங்கேற்போம் எனக் கூறி கலந்தாய்வை புறக்கணித்து வெளியேறினர். அதோடு மட்டுமன்றி கலந்தாய்வு நடைபெற்ற பள்ளி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க முன்னாள் பொதுச்செயலர் இசக்கியப்பன், மாவட்டச் செயலர் சரவணன் மற்றும் கலந்தாய்வுக்கு வந்திருந்த இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பணியிட மறைப்புக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து, சிறப்பாசிரியர்களான தையல் ஆசிரியர், ஓவிய ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும் நடைபெற்றது. பிற்பகல் வரை புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், பின்னர் கலந்தாய்வில் கலந்துகொண்டனர். 14 பேருக்கு உடனடியாக பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இதில், 6 இடைநிலை ஆசிரியர்கள், ஓர் ஓவிய ஆசிரியர், 7 உடற்கல்வி ஆசிரியர்கள் இடமாறுதல் உத்தரவு பெற்றனர். இதேபோல, புதன்கிழமையும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில், மாவட்டம்விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர்.
ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு: சிஇஓ
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஒளிவுமறைவற்ற வகையில் நடந்து வருகிறது என முதன்மை கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான காலியிடங்கள் 5 மட்டுமே இருந்தன. எனவே, அவற்றை அறிவித்தோம். ஆனால், 11 இடங்கள் இருப்பதாக ஒரு சிலர் புகார் தெரிவித்தனர். உபரி பணியிடங்களையும் கணிக்கிட்டு 11 இடங்கள் எனக் கூறுகின்றனர். குறைந்த மாணவர்கள் உள்ள இடங்களில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க முடியாது. அந்த இடங்களுக்கு ஊதியம் பெற்று வழங்கவும் முடியாது. உபரி பணியிடங்கள் இருந்தால் அவை பள்ளிக் கல்வித் துறை வசம் ஒப்படைப்பு செய்ய வேண்டும். அதன்பிறகே பணிநிரவல் முறையிலோ, இடமாறுதல் முறையிலோ ஆசிரியரை நியமனம் செய்ய முடியும். ஆனால், உபரி பணியிடங்களைக் கணக்கிட்டு கூடுதல் இடங்கள் உள்ளதாக பொய்யான குற்றச்சாட்டை கூறினர். இதுதொடர்பாக, ஆசிரியர்களிடம் விளக்கி கூறியதைத் தொடர்ந்து அனைவரும் கலந்தாய்வில் பங்கேற்று மகிழ்ச்சியுடன் இடமாறுதல் உத்தரவை பெற்றுச் சென்றனர் என்றார் அவர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...