உள்ளாட்சி பதவிகளில் அதிக பெண்கள் வர வாய்ப்பு : இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் அதிகரிப்பு !

தமிழக உள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு, 50 சதவீதத்திற்கும் மேல், இட ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதால், ஆண்களை விட அதிக பதவிகளில், பெண்கள் அமரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழகத்தில், கிராம ஊராட்சிகள் முதல், மாநகராட்சி வரை, பல நிலைகளில், 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. இதில்,
பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. அடுத்த மாதம் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில், முதல் முறையாக, 50 சதவீத இட ஒதுக்கீடு அமலாகிறது.



அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இட ஒதுக்கீடு, சுழற்சி முறை மற்றும் பெண் வாக்காளர்கள் அடிப்படையில், பெண்களுக்கான வார்டுகள் பிரிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில், பெண்களுக்கு, 50 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியில் உள்ள, 200 வார்டுகளில், பெண்களுக்கு, 92; ஆதிதிராவிட பெண்களுக்கு, 16 என, 108 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை தவிர, 31 மாவட்டங்களில், மாவட்ட ஊராட்சி தலைவர் இடங்கள் உள்ளன. இதில், ஆதிதிராவிட பெண்களுக்கு, நான்கு; பெண்கள் பொதுப் பிரிவுக்கு, 12 என, பெண்களுக்கு, 16 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில், 13 ஊராட்சி ஒன்றியங்களில், ஏழு; விருதுநகரில், 11ல், ஆறு; திருநெல்வேலியில், 19ல், 10; கன்னியாகுமரியில், ஒன்பது ஒன்றிய தலைவர்களில், ஐந்து

பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.



கூடுதல் இடங்கள் : காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள, 59 ஊராட்சிகளில், 30; சித்தாமூர் ஒன்றியத்தில் உள்ள, 43 ஊராட்சிகளில், 22; பரங்கிமலை ஒன்றியத்தில் உள்ள, 15 ஊராட்சிகளில், எட்டு ஊராட்சி தலைவர் பதவி, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சிகளிலும், பெண்களுக்கு, 50 சதவீதத்தை விட, கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுப் பிரிவு வார்டுகளிலும், கட்சியின் பெரிய பதவியில் உள்ளோர், தங்கள் மனைவி மற்றும் மகள்களை நிறுத்த வாய்ப்பு அதிகம் என்பதால், இம்முறை உள்ளாட்சி தேர்தலில், ஆண்களை விட, பெண்கள் அதிக அளவில், முக்கிய பதவிகளில் அமர வாய்ப்புள்ளது.



ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டு : பெண்களுக்கான வார்டு ஒதுக்கீட்டில், எதிர்க்கட்சிகள் செல்வாக்கு உள்ள வார்டுகளை, ஆளுங்கட்சியினர், பெண்கள் வார்டாக மாற்றி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆளுங்கட்சியில் செல்வாக்காக உள்ளோர், தங்கள் அதிருப்தியாளர்கள் உள்ள வார்டுகளை, பெண்கள் வார்டாக மாற்றிவிட்டதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...