15 நாட்களுக்குள் பணபிரச்னைக்கு தீர்வு : சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு!!!

ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மத்திய அரசுக்கு 9 கேள்விகளை எழுப்பியுள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் பணபிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என மத்திய அரசு தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.




வழக்கு:

ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.


தீரவில்லை:

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ரூபாய் நோட்டு வாபசை தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னைகள் தீரவில்லை. ஏடிஎம்களில் பணம் காலியாக உள்ளது. மறுசீரமைப்பு பணிகள் சரியாக செய்யவில்லை. கூட்டுறவு வங்கிகள் முடங்கியுள்ளன என தெரிவித்தார்.


விரைவில் தீர்வு:

மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கூறுகையில், மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த 10 முதல் 15 நாட்களில் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும். வங்கியில் பணம் எடுக்க உச்சவரம்பு உள்ளது போல், குறைந்தளவு உச்சவரம்பு தொடர்பாக கோர்ட்டில் கருத்து குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்.


கேள்வி:

தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்ட போது அந்த திட்டம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததா? வாரந்தோறும் ரூ.24 ஆயிரம் மட்டும் எடுக்கலாம் என எப்படி நிர்ணயம் செய்யப்பட்டது? மத்திய அரசு கூறியவாறு வங்கிகள் ஏன் ரூ.24 ஆயிரம் வழங்கவில்லை. குறைந்தளவு தொகை எவ்வளவு எடுக்கலாம் என ஏன் நிர்ணயம் செய்யப்படவில்லை? கூட்டுறவு வங்கிகள் ஏன் பழைய நோட்டுகள் டெபாசிட் செய்ய அனுமதிக்கப்படவில்லை? ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் கூட்டுறவு வங்கிகள் முடங்கியுள்ளது பற்றி மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணையை வரும் புதன் கிழமைக்கு ஒத்திவைத்தனர். மேலும், இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்றுவது தொடர்பாக அன்று முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...