குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்துக்கு புதிய தலைவர் அரசுக்கு 2 வாரம் அவகாசம் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவு!!!

குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக முன்னாள் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனை நியமித்ததை மறுபரிசீலனை செய்து புதிய தலைவரை நியமிக்க தமிழக அரசுக்கு 2 வார அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.குழந்தைகள் உரிமை

சென்னை ஐகோர்ட்டில் மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் பாடம் ஏ.நாராயணன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் குழந்தைகள் காப்பகங்களை கண்காணிக்கும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் முறைப்படுத்தப்படாமல் உள்ளது. அந்த ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தகுந்த நபரை நியமிக்க வேண்டும் என கூறியிருந்தார்.இந்த மனு ஏற்கனவே தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனை ஆணையத்தின் தலைவராக நியமித்துள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, மனுதாரர் நாராயணன் குறுக்கிட்டு, அவசர கோலத்திலும், வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றாமல் இந்த நியமனம் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.2 வாரம் அவகாசம்

அப்போது நீதிபதிகள், இந்த விஷயத்தில் ஏற்கனவே கோர்ட்டு விதித்துள்ள விதிமுறைகளையும், குழந்தைகள் நல பாதுகாப்பு சட்ட விதிமுறைகளையும் முறையாக பின்பற்றி தலைவர் நியமனத்தை மறுஆய்வு செய்து தகுதியான நபரை நியமிக்காவிட்டால், கோர்ட்டு தலையிட நேரிடும் என எச்சரித்திருந்தனர்.ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன்கவுல், நீதிபதி எம்.சுந்தர் அமர்வில் நேற்று விசாரணைக்கு இந்த வழக்கு வந்தபோது, கோர்ட்டு கடந்த முறை பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற 2 வாரம் காலஅவகாசம் வேண்டும் என்று அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்ற நீதிபதிகள் காலஅவகாசம் வழங்கி வழக்கை ஜனவரி 2–ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...