பிளாஸ்டிக் கரன்சி அச்சடிக்க முடிவு: மத்திய அரசு தகவல்!!!

பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பார்லிமென்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


சோதனை முயற்சி:

பிளாஸ்டிக் நோட்டு அச்சடிக்க ரிசர்வ் வங்கி நீண்ட காலமாக ஆலோசனை நடத்தி வந்தது. கடந்த 2014ம் ஆண்டு, பார்லிமென்டில் மத்திய அரசு, கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர், சிம்லா மற்றும்
புவனேஸ்வரில் சோதனை முறையாக பிளாஸ்டிக் நோட்டுக்கள் அச்சடித்து வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. பிளாஸ்டிக் நோட்டுகளை போலியாக அச்சடிப்பது மிகவும் கடினம். ரூபாய் நோட்டுகளை விட சுத்தமாக வைத்திருக்க முடியும். முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் பிளாஸ்டிக் நோட்டு வெளியிடப்பட்டது.


முடிவு:

இந்நிலையில், மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேகவால் லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: பிளாஸ்டிக் அல்லது பாலிமர் மூலக்கூறுகளால் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 2015 ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஹோஷிங்காபாத் பாதுகாப்பு பேப்பர் மூலம் நாசிக்கில் அச்சடிக்கப்பட்ட ரூ.100 நோட்டில் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு தெரிவித்தது. அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனக்கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...