போலீஸைத் தாக்கினால் ஐந்து வருடம் சிறை!

சமீபகாலமாக போலீஸார் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்தத் தாக்குதலை குறைப்பதற்காக, மகாராஷ்டிராவில் போலீஸார் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீதான தண்டனையை இரண்டு வருடத்திலிருந்து ஐந்து வருட சிறை தண்டனையாக உயர்த்த உள்துறை அமைச்சகம் தீர்மானித்து வருகிறது.



இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறுகையில், “இபிகோ பிரிவு 353 கீழ் (அரசாங்க ஊழியர் தாக்குதல்) பதிவு செய்யப்படும் வழக்குகள் கடுமையான குற்றம் எனவும், அதற்கு தண்டனை அதிகரிக்கப்படும் என்பதை மக்களிடம் உணர்த்த வேண்டும்.

மும்பையில், விலாஸ் ஷிண்டே என்ற கான்ஸ்டபிள் டூவிலரில் வந்த இருவரை தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுமாறு கூறியுள்ளார். அதற்கு, அந்த இருவரும் சேர்ந்து காவலரை தடியால் தாக்கியதால் அவர் உயிரிழந்துள்ளார். அதனால், பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸ்கார்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

இந்த திட்டம் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புதல் பெற்ற பின்பு, அது நீதித்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், ஒப்புதலுக்காக அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த திட்டம், பணியில் இருக்கும் அனைத்து அரசாங்க அதிகாரிகளின் பாதுகாப்புக்கும் கைக்கொடுக்கும்” என்கின்றனர் அதிகாரிகள்.

“இது மட்டுமல்லாமல், மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே உள்ள அழுத்தத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், அதிகாரப் பரவல், மகளிர் பாதுகாப்பு குழுக்கள், தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மக்கள் சட்டங்களை பின்பற்ற வேண்டியதின் அவசியம் வலியுறுத்தப்படும். மேலும், பணியில் இருக்கும் போலீஸ்கார்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுதல், அவர்களின் பணிக்கு இடையூறாக இருத்தல், தாக்குதல் போன்றவைகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” என்றும் அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...