இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கில் மதுரை ஐகோர் உத்தரவு



   உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி ஜஸ்டின் பிரபாகர் தாக்கல் செய்த மனு: நான் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன். சுப்ரீம் கோர்ட் உத்தரவைத்தொடர்ந்து,
மாநில பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். மத்திய அரசு 2009 ல், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச தகுதியை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) நிர்ணயித்தது. 
    இதன்படி, தமிழக பள்ளிக் கல்வித்துறை 2011 நவ.,15 ல் அரசாணை 181 வெளியிட்டது. அதில், ‘பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு அடிப்படையில் நியமிக்கப்படுவர். இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில், மாநில பதிவு மூப்பு பின்பற்றப்படும்,’ என தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம், இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு, தகுதித் தேர்வு அவசியமில்லை. 
   ஆசிரியர் தேர்வு வாரியம் 2012 மார்ச் 7 ல், ‘அரசு உதவி பெறும் மற்றும் அரசு உதவி பெறாத பள்ளிகளில், 2010 ஆக.,23 க்கு பின், இடைநிலை அல்லது பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தால், அவர்கள் தகுதித்தேர்வு எழுத வேண்டும்,’ என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது, ஏற்கனவே வெளியான அரசாணை 181 க்கு முரணானது. இடைநிலை ஆசிரியர் பணிக்கு, தகுதித்தேர்வு எழுத வேண்டும் என்ற தேர்வு வாரிய அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேபோல், திருநெல்வேலி புதூரை சேர்ந்த ஜெயக்குமார் உட்பட சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
   இம்மனுக்கள், ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது தனி நீதிபதி, “ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையால், இடைநிலை ஆசிரியர் தேர்வு நடைமுறைகள் பாதிக்கப்படும். தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது,” என்றார். 
   மனுக்கள் நேற்று நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் விதி 18 ன்படி, மத்திய அரசிடம் சில விதிவிலக்குகள் பெறலாம். ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியான பின், தகுதியுள்ள போதிய ஆசிரியர்கள் கிடைக்கவில்லை எனில், கட்டாயக் கல்விச் சட்டம் விதி 18 ன்படி, மத்திய அரசிடம் விலக்கு பெறுவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம். இம்மனுக்கள் பைசல் செய்யப்படுகிறது, என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...