10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 60 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி சதவீதம் பெற காரணமாக இருந்த ஆசிரியர்கள் கல்வித்துறைக்கு பதிலளிக்க உத்தரவு.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் மாணவ, மாணவியர் குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற காரணமாக இருந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள், கல்வித்துறைக்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் 60 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி சதவீதம் பெற காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை
சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்ட ஆசிரியர்கள், கருத்து அளிக்கும் கூட்டம், விரைவில் நடத்தப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், வரும் காலங்களிலும், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்தால், அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்கும் கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...