அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் 288 மாணவர்கள் கல்வி சுற்றுலா பாரத் தர்சன் ரயிலில் சென்றனர்

சென்னை மாவட்டத் தின் அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் அனைத்து அரசு பள்ளிகளிலும் பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியம், நடன போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில்
முதல் இடம் பெற்ற 288 மாணவ-மாணவிகள் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில், 255 மாணவர்கள் மாநகராட்சி பள்ளியை சார்ந்தவர்கள். இந்த மாணவர்கள் நேற்று சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட பாரத் தர்சன் ரயில் மூலம் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். அவர்களை மேயர் சைதை துரை சாமி வழியனுப்பி வைத் தார். துணை மேயர் பெஞ்சமின், இணை ஆணையர்(கல்வி) வெங்கடேஷ், கல்வி இயக்க ஒருங்கிணைப் பாளர் சமாதானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அனை வருக்கும் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
மாணவர்கள் கன்னியாகுமரி மாவட்டத் தில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, காந்தி மண்டபம், குமரி அம்மன் கோயில், கன்னியாகுமரி தேவாலயம், வட்டக்கோட்டை ஆகிய இடங்களுக்கும், திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயில், ஆதிச்சநல்லூர், பறவைகள் சரணாலயம்(கூத்தங்குளம்) உள்ளிட்ட இடங்களை பார்வையிட உள்ளனர். 10 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் வீதம் உடன் சென்றுள்ளனர். ஒரு மாணவனுக்கு சுற்றுலா கட்டணமாக ரூ.2062 வரை செலவு செய்யப்படுகிறது. 3 நாட்கள் சுற்றுலாவை முடித்து கொண்டு 10ம் தேதி மாணவர்கள் சென்னை திரும்புகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...