எஸ்பிஐ வங்கிகளில் 7,740 கிளார்க் பணி ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 13 கடைசி நாள்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அசோசியேட் வங்கிகளில் கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 13ம் தேதி கடைசி நாள். ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பிக்கானீர் அன்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத்,
ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா ஆகிய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் அசோசியேட் வங்கிகளில் மொத்தம் 7,740 கிளார்க் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூரில் மட்டும் 2,500 காலியிடங்கள் உள்ளன. ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை 30ம் தேதி முதல் விண்ணப்பம் பெறப்படுகிறது. கடைசி நாள் ஆகஸ்ட் 13ம் தேதியாகும்.

ஏதேனும் ஒரு வங்கிக்கு, ஒரு மாநிலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அந்த மாநிலத்தில் மட்டுமே தேர்வு எழுத வேண்டிய மையத்தையும் தேர்வு செய்ய வேண்டும். சம்பளம் 7200,19300 ரூபாய். பயிற்சி காலம் 6 மாதம். வயது 1.8.2012ல் 18 முதல் 28 வயது வரை. கல்வி தகுதி 1.8.2012ல் குறைந்தது மொத்தம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். பட்டியல் வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர் குறைந்தது 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். பட்டப்படிப்பு படித்திருப்போரும் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 தேர்ச்சி பெறாமல் 10ம் வகுப்பு முடித்து டிப்ளமோ பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் ஆங்கிலத் தில் எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கின்ற மாநில மொழி தெரிந்திருப்பது கூடுதல் தகுதி. நேர்முகதேர்வில் இது பரிசோதிக்கப்படும். விண்ணப்ப கட்டணம் 350. பட்டியல் வகுப்பு, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு தகவல் கட்டணமாக 50 செலுத்தினால் போதும். விண்ணப்பதாரர் களுக்கு இ,மெயில் முகவரி தேவை. www.sbi.co.in, www.statebankofindia.com என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...