செட், நெட் தேர்வு திறன் பயிற்சி வகுப்பு-

காரைக்குடி அழகப்பா பல்கலையில், செட், நெட் தேர்வு திறன் பயிற்சி வகுப்பு துவங்கப்பட உள்ளதாக, துணைவேந்தர் சேது சுடலைமுத்து கூறினார்.
அவர் கூறியதாவது: கல்லூரி, பல்கலை பேராசிரியர் வேலை வாய்ப்பிற்கு, இன்றைய காலக்கட்டத்தில் "செட்" (மாநில தகுதிதேர்வு),
"நெட்" (மத்திய தகுதிதேர்வு) போட்டி தேர்வு இன்றியமையாததாகி விட்டது. இந்தியாவின் எந்த பகுதியிலும், பல்கலை ஆசிரியர், கல்லூரி ஆசிரியராக பணிபுரிவதற்கு "நெட்" தேர்வு எழுத வேண்டும்.
குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும் பணிபுரிவதற்கு அந்த மாநிலத்தின் "செட்" தேர்வு எழுத வேண்டும். எனவே, அவர்கள் பயன்பெறும் வகையில், இதற்கான பயிற்சி வகுப்புகள், காரைக்குடி அழகப்பா பல்கலையில், ஆக., 25க்கு மேல் துவங்கப்பட உள்ளன.
இதில் தேர்வை எதிர்கொள்வது எப்படி? தெரிந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல், பாடமுறைகளை எவ்வாறு மாணவர்களிடம் நடைமுறைப்படுத்துவது, என பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. இதேபோல் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி, தொழில் முனைவோர் பயிற்சி வகுப்புகளும் துவங்கப்பட உள்ளன, என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...