கியூரியாசிட்டி விண்கலம் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது




 அமெரிக்காவின் நாசா அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக
தரையிறங்கியதால், நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாசா மைய விஞ்ஞானிகள் 1400 பேரும், ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்து கொண்டனர். செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா என்பதை ஆராய கியூரியாசிட்டி விண்கலத்தை, நாசா செவ்வாய்க்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ள கியூரியாசிட்டி விண்கலம் கடந்த 8 மாதத்திற்கு முன், பயணத்தை துவங்கியது குறிப்பிடத்தக்கது. 57 கோடி கிலோ மீட்டர் துரம் பயணித்து, செவ்வாய் கிரகத்தை கியூரியாசிட்டி அடைந்துள்ளது. செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ரூ.14 ஆயிரத்து 300 கோடியை, நாசா இதுரை செலவிட்டுள்ளது. 

செவ்வாயில் கியூரியாசிட்டியின் பணி

செவ்வாய் கிரகத்தில் உயிரினம் இருந்ததா என்பதை கியூரியாசிட்டி விண்கலம் ஆராய உள்ளது. மேலும் தற்போதைய முதல் தகவலின் படி செவ்வாய் கிரகத்தில் நீர் இருந்திருக்கலாம் என்பதை மேற்பரப்பிலுள்ள களிமண் உறுதி செய்துள்ளது. கியூரியாசிட்டி தான் இறங்கிய தளத்திற்கு அருகேயுள்ள குன்றை ஆராய ஆயத்தமாகியுள்ளதாக நாசா தகவல்கள் தெரிவிக்கின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...