ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுஎந்த நேரத்திலும் வெளியாகும்: தேர்வு வாரிய தலைவர்

 தமிழ்நாட்டில் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு தகுதித்தேர்வும் கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தனித்தனியேநடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளைஏறத்தாழ 6.5 லட்சம் ஆசிரியர்கள்எழுதினார்கள். தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளியிடப்படப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தேர்வு நடந்து முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டதால், அனைவரும் தேர்வு முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.இந்த தகுதித்தேர்வுமூலமாக சுமார் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களையும், 5 ஆசிரியர் இடைநிலை ஆசிரியர் பணி இடங்களையும் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமானால் குறைந்தபட்சம் 60சதவீத மதிப்பெண் அதாவது, 150-க்கு 90 மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டும்.பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரையில், முழுக்க முழுக்க தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், இடைநிலை ஆசிரிய நியமனம், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் இருந்து பதிவுமூப்பு மூலமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவு குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரியிடம் கேட்டபோது, ‘தகுதித்தேர்வு முடிவுகள் தயார் நிலையில் உள்ளன. தேர்வு முடிவு எந்த நேரத்திலும் வெளியாகும்’ என்றார்.தகுதித்தேர்வு மிகவும் கடினமான இருந்ததாகவும் விடை அளிக்க நேரம் போதாது என்றும் தேர்வு எழுதிய அனைத்து ஆசிரியர்களுமே புகார் தெரிவித்து இருந்தனர். இதற்கிடையில், தகுதித்தேர்வில் வெறும் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும், 10 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்றும் வெவ்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.ஏறத்தாழ 23 ஆயிரம் ஆசிரியர் பணிஇடங்களை நிரப்ப வேண்டியுள்ளதால், தகுதித்தேர்வில் தேவையான அளவுக்கு தேர்ச்சி வரவில்லை என்றால் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள்? தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்படுமா? டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ள தகுதித்தேர்வு மூலம் எஞ்சிய காலி இடங்கள் நிரப்பப்படுமா? என்று தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குழம்பிப்போய் உள்ளனர். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) உத்தரவின்படி, தகுதித்தேர்வில், எஸ்.சி., எஸ்.டி. பி.சி., எம்.பி.சி. போன்ற இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5சதவீதம் வரை மதிப்பெண் குறைக்கலாம்.எனவே, போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதம் என்று நிர்ணயிக்கப்படலாம். அதற்கு மேல் குறைத்தால் பல்வேறு சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கருதுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...