10-ம் வகுப்பு தனித் தேர்வு அக்டோபர் 15-ல் தொடக்கம்



பத்தாம் வகுப்பு தனித் தேர்வு அக்டோபர் 15-ம் தேதி தொடங்கும் என்று அரசுத்தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதம் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறாத சுமார் 70 ஆயிரம் பேர் இந்தத் தேர்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பத்தாம் வகுப்புத் தேர்வு (பொது பாடத்திட்டம் மற்றும் பழைய பாடத்திட்டம்) தேர்வு அட்டவணை விவரம்:அக்டோபர் 15 மொழிப்பாடம் முதல் தாள், 16 - மொழிப்பாடம் இரண்டாம் தாள், 18-ஆங்கிலம் முதல் தாள், 19-ஆங்கிலம் இரண்டாம் தாள், 22-கணிதம், 25-அறிவியல், 26-சமூக அறிவியல்.மெட்ரிகுலேஷன் தேர்வு அட்டவணை (பழையப் பாடத்திட்டம்): அக்டோபர் 15-மொழிப்பாடம் முதல் தாள், 16-மொழிப்பாடம் இரண்டாம் தாள், 17-ஆங்கிலம் முதல் தாள், 18-ஆங்கிலம் இரண்டாம் தாள்,19-கணிதம் முதல் தாள்,  20-கணிதம் இரண்டாம் தாள், 22-அறிவியல் முதல் தாள், 25-அறிவியல் இரண்டாம் தாள், 26-வரலாறு மற்றும் குடிமையியல், 29-புவியியல் மற்றும் பொருளியியல்.ஆங்கிலோ-இந்தியன் தேர்வு கால அட்டவணை (பழையப் பாடத்திட்டம்): அக்போடர் 15- மொழிப்பாடம், 16-ஆங்கிலம் முதல் தாள், 17-ஆங்கிலம் இரண்டாம் தாள், 18-கணிதம் முதல் தாள், 19-கணிதம் இரண்டாம் தாள், 20-அறிவியல் முதல் தாள், 22-அறிவியல் இரண்டாம் தாள், 25- வரலாறு மற்றும் குடிமையியல், 26- புவியியல்.ஓ.எஸ்.எல்.சி. தேர்வு கால அட்டவணை (பழைய பாடத்திட்டம்): அக்டோபர் 15- தமிழ், 16 - பிரதான மொழிப்பாடம் முதல் தாள் (சம்ஸ்கிருதம்/அரபி/பாரசீகம்), 17-பிரதான மொழிப்பாடம் இரண்டாம் தாள் (சம்ஸ்கிருதம்/அரபி/பாரசீகம்),  18 - ஆங்கிலம் முதல் தாள், 19  ஆங்கிலம் இரண்டாம் தாள், 20-சிறப்பு மொழிப்பாடம் மூன்றாம் தாள் (அட்வான்ஸ்டு லாங்குவேஜ் பேப்பர் 3) (சம்ஸ்கிருதம்/அரபி), 22-கணிதம், 25-அறிவியல், 26- சமூக அறிவியல்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...