1,080 முதுநிலை ஆசிரியர்களுக்கு ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் பணி நியமனம்


வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,080 முதுநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மற்றும் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார். பணி நியமன
கலந்தாய்வில் ஆன்-லைன் முறை பின்பற்றப்படுவது இதுவே முதல் முறையாகும்.இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிவிப்பு:வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பின் அடிப்படையில் 1,080 முதுநிலை ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதற்கான கலந்தாய்வு இரண்டு கட்டமாக நடத்தப்பட உள்ளது.நாளை மாவட்ட கலந்தாய்வு: ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலியிடங்களுக்கு அந்தந்த மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்தக் கலந்தாய்வு சனிக்கிழமை (செப்டம்பர் 15) காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும்.இந்தக் கலந்தாய்வில் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க முடியாது.16-ல் "ஆன்-லைன்' கலந்தாய்வு: சென்னை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலியிடங்கள் எதுவும் இல்லை.எனவே, இந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கும், சொந்த மாவட்டங்களில் போதிய காலியிடங்கள் இல்லாதவர்கள் மற்றும் சொந்த மாவட்டங்களில் பணிபுரிய விரும்பாமல் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விரும்புபவர்கள் ஆகியோருக்கும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 16) ஆன்-லைன் கலந்தாய்வு திருச்சியில் நடைபெறும். திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணிக்கு இந்தக் கலந்தாய்வு தொடங்கும்.தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர் காலியிடங்கள் உள்ளன. இதில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களைக் கொண்ட பள்ளிகள் மட்டுமே கலந்தாய்வுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆன்-லைன் கலந்தாய்வில் பணி நியமனம் பெற்றவர்கள் அனைவரும் செப்டம்பர் 17-ம் தேதியே (திங்கள்கிழமை) பணியில் சேர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...