பிளஸ் 2 தனித் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 18ம் தேதி கடைசி நாள்

பிளஸ் 2 தோல்வி அடைந்த மாணவர்களுக்காக தனித் தேர்வு அக்டோபரில் நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் முறை இந்த ஆண்டு அறிமுகமாகிறது.
தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு மீண்டும்

தேர்வு எழுதலாம். 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு இடைவெளியும், பதினாறரை வயது பூர்த்தியானவர்கள் நேரடி தனித்தேர்வர்களா கவும் தேர்வு எழுதலாம்.முதன் முதலாக தேர்வு எழுதுவோர் எச்பி வகையை சேர்ந்தவர்கள் மொழிப்பாடங்களுடன் குறிப்பிட்ட 5 பாடத் தொகுப்பில்( 304, 305, 306, 307, 308 தொகுப்பு) ஏதா வது ஒரு பாடத்தொகுப் பில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தேர்வுக்கட்டணமாக Ï.150, இதரக்கட்டணம்Ï.35, உள்படÏ.187 செலுத்த வேண்டும். மறுமுறை தேர்வு எழுதுவோர்Ï.35 கட்டணம் செலுத்த வேண்டும்.ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். அதில் உள்ள சலான் மூலம் கட்டணம் செலுத்த வேண்டும். கோர்பேங்கிங் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் செலுத்த வேண்டும்.விண்ணப்ப எண்ணை தவறாமல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். தனித் தேர்வர்கள் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.13ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தாலும், பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தில் போட்டோ ஒட்டி படித்த பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து வாங்கி அந்தந்த மாவட்டத்தில் உள்ள மண்டல தேர்வு அலுவலகத்துக்கு பூர்த்தி செய்த விண்ணப்பம், பணம் கட்டிய ரசீது, ஆகியவற்றை இணைத்து நேரடியாவோ, பதிவு தபால் மூலமோ 18ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...