பிளஸ் 2 தனித்தேர்வு ஹால் டிக்கெட்: எங்கு பெறலாம்?


பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் எங்கு பெறலாம் என அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அறிவித்துள்ளார்.  பிளஸ் 2 தனித்தேர்வுக்கு
ஆன்-லைனில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு வெள்ளி, சனி, திங்கள்கிழமை ஹால் டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது.  இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கல்வி மாவட்டவாரியாக ஹால் டிக்கெட் விநியோகம் செய்யும் மையங்களின் விவரம்:  கல்வி மாவட்டம் ஹால் டிக்கெட் விநியோக மையம்  1. மத்திய சென்னை, கிழக்கு சென்னை,  வட சென்னை, தென் சென்னை - மதரஸô-ஐ- ஆசாம் மேல்நிலைப் பள்ளி,  அண்ணா சாலை, சென்னை-2  2. காஞ்சிபுரம் - ஆண்டர்சன் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.  3. செங்கல்பட்டு - செயின்ட் கொலம்பஸ் மேல்நிலைப் பள்ளி,  செங்கல்பட்டு.  4. பொன்னேரி - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பொன்னேரி.  5. திருவள்ளூர் - டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப் பள்ளி,  திருவள்ளூர்.  ஹால் டிக்கெட் அஞ்சல் மூலம் அனுப்பப்படாது.  தத்கல் முறையில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு நேரில் சென்று ஹால் டிக்கெட்டை பெற்றுச் செல்லலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...