அரசை தவிர வேறு யாரும் நடத்தக்கூடாது: மனித உரிமை அமைப்புகளுக்கு ஐகோர்ட் கிளை அதிரடி தடை

மனித உரிமைகள் என்ற பெயரில் அரசைத் தவிர வேறு யாரும் செயல்படக்கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த அப்துல்ரகுமான், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்ற மேலாண் அறங்காவலராக
உள்ளேன். பதிவு செய்யப்பட்ட இந்த அமைப்பின் மூலம் ஏழைகள் மற்றும் படிக்காதவர்களுக்கு சட்டம் மற்றும் உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். பட்டுக்கோட்டை கூடுதல் எஸ்பி சில நாட்களுக்கு முன் என்னை கடுமையாக திட்டினார். மனித உரிமை என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என தொடர்ந்து இடையூறு செய்கிறார்.

நீதிமன்றம் தலையிட்டு எங்களது அமைப்பின் நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என்று உத்தரவிடவேண்டும்,’’ என கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி பி.ராஜேந்திரன் விசாரித்தார். ‘‘மனித உரிமை என்ற பெயரில் மாநில அரசின் ஒரே அமைப்பு மட்டும்தான் இருக்கமுடியும். இந்த பெயரில் வேறு யாரும் செயல்படக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனித உரிமை என்ற பெயர் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இந்த அமைப்பு பதிவு செய்யப்பட்டதாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கலாம். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,’’ என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...