தபால் அலுவலகங்களில் தொலைநிலைக் கல்வி விண்ணப்பங்கள்?

மதுரை காமராஜ் பல்கலை, தொலைநிலைக் கல்வியில் சேருவதற்கான விண்ணப்பங்கள், தபால் அலுவலகங்கள் மூலம்
வினியோகிக்க பரிசீலனை நடக்கிறது.
தொலைநிலைக் கல்வியில் சேருவதற்கு பல்கலையில் உள்ள அத்துறையில் அல்லது பல்கலைக்கு உட்பட்டு பல்வேறு இடங்களில், இயங்கும் படிப்பு மையங்களில் (ஸ்டடீஸ் சென்டர்கள்) கட்டணம் செலுத்தி, விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதற்காக, இப்பல்கலை சார்பில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும், சிங்கப்பூர், குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் மையங்கள் உள்ளன.
இந்த மையங்கள், பெரும்பாலும் தாலுகா, தலைமையிடங்களில் செயல்படுகின்றன. கிராமப்புற மாணவர்கள் அந்த மையங்களுக்கு சென்று விண்ணப்பம் பெறவேண்டியுள்ளது. இம்முறையை எளிதாக்க, தபால் அலுவலங்களில் விண்ணப்பங்கள் வினியோகிக்க பல்கலை நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. இதனால், படிப்பு மைங்களுக்கான செலவு குறையும் என்று, நிர்வாகம் கருதுகிறது.
துணைவேந்தர் கல்யாணி கூறுகையில், "தபால் அலுவலகங்கள் மூலம் தொலை நிலை கல்விக்கான விண்ணப்பங்கள் வழங்குவது குறித்து பரிசீலனை நடக்கிறது. இதற்காக "சிறப்பு கமிட்டி" அமைத்து ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும்,' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...