வருடம், கிழமையில் தவறு ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால்டிக்கெட்டில் குழப்பம்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில், தேர்வு நாள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை திருத்தும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு, தகுதித் தேர்வு  எழுதிய  6 லட்சத்து 76 ஆயிரம் பேர் தேர்வு
எழுத விண்ணப்பித்தனர். தேர்வில் 2700 பேர் தான் தேர்ச்சி பெற்றனர். புதுச் சேரியில் ஒரு பட்ட தாரி கூட தேர்ச்சி பெற வில்லை. தோல்வி அடைந் தவர்களுக்கு மீண்டும் அக் டோபர் 3ம் தேதி தேர்வு நடக்கும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போக இப்போது  6 லட் சத்து 55 ஆயிரத்து 350 பேர் தமிழகத்திலும், 8787 பேர் புதுச்சேரி யிலும் தேர்வு எழுத உள்ளனர். இவர் களுக்கு புதிய பதிவு எண்கள் மற்றும் தேர்வு  மையம் ஆகியவற்றை தேர்வு வாரியம் ஒதுக்கி யுள்ளது. இது குறித்த விவரங்களை நேற்று இணைய தளத்தில் தேர்வு வாரியம் வெளி யிட்டது. ஆனால் தேர்வு நடக்கும் நாளை அக்டோ பர் 3, 2013, வியாழக் கிழமை என்று குறிப்பிட் டுள்ளனர். ஆனால் அடுத்த மாதம் தேர்வு நடக்க உள்ள தேதி அக் டோபர் 3, 2012 புதன் கிழமை.

இதையடுத்து, நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் ஆசிரியர் தேர்வு  வாரி யத்துக்கு சென்றனர். அதற்கு பிறகு இணைய தளத்தை பார்த்த அதிகாரிகள் அவசரம் அவசரமாக தவறுகளை திருத்தினர். அதில் 2013 என்பதை 2012 என்று திருத்தினர். ஆனால் கிழமையை திருத்தவில்லை. அதற்கு பிறகும், கிழமை தவறாக உள்ளது குறித்து சிலர் புகார் தெரிவித்தனர். பின்னர் அதை திருத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் இடைநிலை பட்டதாரி கள் தொடர்ந்த வழக்கில், தகுதி தேர்வில் போதிய சதவீதம் தேர்ச்சி இல்லை என்றால், கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூறப் பட்டுள்ளபடி மத்திய அரசிடம் விதி தளர்வு கேட்கலாம் என்று நீதி மன்றம் தெரிவித்து விட்டது. அதை ஆசிரியர் தேர்வு வாரியம் கருத் தில் எடுத்துக் கொள்ளா மல் இடைநிலை ஆசிரியர்களுக்கும் தேர்வு நடக்கும் என்று அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...