நெல்லை பல்கலை.,தொலைநெறி கல்வியில் டிசம்பர் 14ம் தேதி தேர்வுகள் துவக்கம்

நெல்லை பல்கலை.,தொலைநெறித் தொடர் கல்வி இயக்ககத்திற்கு டிசம்பர் மாதம் 14ம் தேதி தேர்வு துவங்குகிறது.நெல்லை பல்கலை.,தேர்வாணையர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நெல்லை பல்கலை.,தொலைநெறித் தொடர் கல்வி இயக்ககம் சார்பில் வருடாந்திர அடிப்படையில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் முந்தையை தேர்வுகளில் தவறிய மாணவர்களுக்கும் டிசம்பர் மாதம் 14ம் தேதி முதல் தேர்வுகள் துவங்குகின்றன. மேற்படி தேர்வுக்குறிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அக்டோபர் 29ம் தேதிக்குள் அபராதத் தொகையினை நவம்பர் மாதம் 8ம் தேதிக்குள் அபராத தொகையுடன் "பதிவாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்' என்ற பெயரில் மாற்றத்தக்கதாக எடுக்கப்பட்ட கேட்பு வரைவோலையையும் இணைத்து தேர்வாணையர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், என்ற முகவரிக்கு நவம்பர் மாதம் 10ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.நவம்பர் மாதம் 11ம் தேதியில் இருந்து 16ம் தேதிக்குள் பெறப்படும் விண்ணப்பங்களின் விண்ணப்பதாரர்கள்,நெல்லை தேர்வு மையத்தில் ரூ.500 அபராதத்தொகையுடன் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.இவ்வாறு பிரபாகர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...