சிறப்பு ஆசிரியர்கள் 1,524 பேர் நியமனம் : தேர்வு பட்டியல் தயார்

பள்ளி கல்வித் துறையில், 1,524 சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்திற்கான தேர்வு பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, வாரியம் வெளியிட்டுள்ள

செய்திக்குறிப்பு: பள்ளி கல்வித் துறையில், உடற்கல்வி, ஓவியம், தையல் உள்ளிட்ட பிரிவுகளில், 1,524 சிறப்பு ஆசிரியர்கள்; அரசு பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர்கள்; அரசு, "பாலிடெக்னிக்' கல்லூரிகளில், 139 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் இன சுழற்சி அடிப்படையிலான தேர்வு பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இம்மாதம், 1ம் தேதி, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களும், நிரப்பப்பட உள்ளன.
தேர்வு பட்டியலில் இடம் பெற்றோருக்கு, விரைவில் கடிதம் அனுப்பப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...