224 தலைமை ஆசிரியர்கள் நியமனம்

அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, "ஆன்-லைன்' வழியாக, நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. பட்டதாரி ஆசிரியர், 224 பேர், தலைமை
ஆசிரியராக
பதவி உயர்வு செய்யப்பட்டனர்.கடந்த, 15ம் தேதி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, "ஆன்-லைன்' வழியாக நடந்தது. இதில், 143 பேர், பதவி உயர்வு பெற்றனர்.இதைத் தொடர்ந்து, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, நேற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், ஆன்-லைன் வழியாக நடந்தது.
மொத்தம், 446 பணியிடங்கள் காலியாக உள்ளன. நேற்று, 250 பணியிடங்களை நிரப்ப, பணிமூப்பு அடிப்படையில், தகுதி வாய்ந்தவர்கள் அழைக்கப்பட்டனர். முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்தபடி, ஆன்-லைனில், ஒவ்வொருவராக, விரும்பிய இடங்களை தேர்வு செய்தனர்.இதில், 224 பேருக்கு, பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன. 26 பேர், பதவி உயர்வை, மறுத்தனர்.பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன், இணை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர், கலந்தாய்வு பணிகளை கவனித்தனர். மீதமுள்ள காலியிடங்களுக்கு, இன்று கலந்தாய்வு நடக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...