4ம் தேதி குரூப்-2 தேர்வு : 6.5 லட்சம் பேர் பங்கேற்பு


நவம்பர் 4ம் தேதி நடக்கும் குரூப்-2 தேர்வுக்கு, அனைத்து ஏற்பாடுகளையும், டி.என்.பி.எஸ்.சி., செய்து முடித்துள்ளது. நகராட்சி கமிஷனர், சார்-பதிவாளர், உதவி வணிகவரி அலுவலர் உள்ளிட்ட, குரூப்-2 நிலையில், 3,687 காலி பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 12ல், தேர்வு நடந்தது. இதில், 6.5 லட்சம் பேர்
பங்கேற்றனர். அத்தேர்வு கேள்வித்தாள்,
முன்கூட்டியே, "லீக்' ஆனதால், தேர்வு ரத்து செய்யப்பட்டு, நவம்பர் 4ல், மறுதேர்வு நடக்கும் என, தேர்வாணையம் அறிவித்தது. அதன்படி, 4ம் தேதி நடக்கும் மறுதேர்வில், ஏற்கனவே பதிவு செய்த, 6.5 லட்சம் பேரும் பங்கேற்கின்றனர். இவர்களுக்கான, "ஹால் டிக்கெட்', தேர்வாணைய இணையதளத்தில் (தீதீதீ.tணணீண்ஞி.tண.ணடிஞி.டிண) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள், இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். மாநிலம் முழுவதும், 3,456 மையங்களில், தேர்வு நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக, தேர்வாணைய தலைவர் நடராஜ் தெரிவித்தார். வழக்கம்போல், அனைத்து தேர்வு மையங்களிலும், வீடியோ கண்காணிப்பு இருக்கும் எனவும், அவர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...