சுகாதார பயிற்சி முகாமில் தகவல் 47 சதவீத மாணவர்களுக்கு பல் துலக்க தெரியவில்லை

 சுகாதார விழிப்புணர்வு அதிகம் இல்லாததால் 47 சதவீத மாணவர்களுக்கு சரியாக பல் தேய்க்கக்கூட தெரியவில்லை என சுகாதார திட்ட பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதற்காக மாநில
கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை இணைந்து ஆசிரியர்களுக்கான நான்கு சுற்று பயிற்சி முகாமை தமிழகம் முழுவதும் நடத்துகிறது. 

நெல்லை சாராள் தக்கர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் நேற்று தொடங்கிய முதல் சுற்று 2 நாள் பயிற்சி முகாமை அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரி பரிமளா துவக்கி வைத்தார். இதில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 6 முதல் 8ம் வகுப்பு ஆசிரியர், ஆசிரியைகள் தலா 2 பேர் கலந்து கொண்டனர். 

பயிற்சி முகாமில் பேசிய தலைமை கருத்தாளர்கள், மாணவர்கள் மத்தியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு முழுமையாக இல்லை. பற்களை பராமரிக்ககூட தெரியவில்லை, 47 சதவீதம் மாணவர்கள் எப்படி முறையாக பல் தேய்ப்பது என்பது தெரியாமல் உள்ளனர். இதனால் 40 சதவீத மாணவர்களுக்கு சொத்தை பற்கள் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. புகையிலை போன்ற பழக்கங்கள் பல மாணவர்களுக்கு சிறு வயதிலேயே ஏற்பட்டுள்ளது என்பது போன்ற தகவல்களை தெரிவித்தனர்.  

முகாமில், மாணவர்கள் நாள்தோறும் உண்ண வேண்டிய சரிவிகித உணவு, உடல் எடை பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் சுத்தத்தை பராமரித்தல், தன்சுத்தம் பேணுதல், கொசு ஒழிப்பு நடவடிக்கை, பல் பராமரிப்பு போன்றவை குறித்து  கம்ப்யூட்டர் பட விளக்கங்களுடன் ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. இதேபோல் ஆசிரியர்களுக்கான மன அழுத்தம், உடல் நலம் பேணுதல் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...