விரிவுரையாளர் தகுதி @தர்வு: 58 ஆயிரம் பேர் பங்கேற்பு


தமிழகம் முழுவதும் நேற்று நடந்த, விரிவுரையாளர் தகுதி தேர்வில், 58 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
அர” கல்லூரிகளில், காலியாக உள்ள

விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்ப, மாநில அளவிலான தகுதித் தேர்வு, (செட்) நேற்று நடந்தது. இத்தேர்வை எழுத, இணையதளம் மூலம், 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
இதில், 58 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டது. மூன்று பிரிவுகளாக நடந்த தேர்வில், பெண்க@ள அதிக அளவில் பங்@கற்றனர்.
இவர்களுக்கான தகுதித் தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. இதற்கென, மாநிலம் முழுவதும், 76 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

தேர்வு குறித்து, முதன்மை செயலர் ஸ்ரீதர் கூறுகையில், ""அதிகபட்சமாக சென்னையில், 12 மையங்களில், 10,508 பேர் தேர்வு எழுதினர். திருச்சியில், 9,812 பேரும், சேலத்தில், 7,344 பேரும் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும்,'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...