6 மாதங்களில் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள்?

நாடு முழுவதுமுள்ள அனைத்துப் பள்ளிகளிலும், தண்ணீர் வசதி, மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான தனித்தனி கழிப்பறைகளை
மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.
குடிநீர், தனித்தனி கழிவறைகள், போதுமான வகுப்பறைகள், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களை நியமனம் செய்தல் ஆகிய பணிகளை 6 மாதங்களுக்குள் முடிக்க, உச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.
மேற்கூறிய வசதிகள், அரசு, அரசு உதவிபெறும், மாநில, மத்திய அரசு பள்ளிகள், தனியார், சிறுபான்மையின அல்லது சாதாரண என அனைத்து நிலைகளிலான பள்ளிகளுக்கும் பொருந்தும். ஒரு தொண்டு நிறுவனம்(NGO) இதுகுறித்து தாக்கல் செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், 6 மாத காலத்திற்குள் பணிகள் நடைபெறாவிட்டால், மனுதாரர் இதுகுறித்து மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்ற அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...