தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.60 சதவீதம் வட்டி?

:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட சந்தாதாரர்கள் பயன்அடையும் வகையில், 2011 - 2013ம் நிதி ஆண்டில், 8.60 சதவீதம் வட்டி வழங்கப்பட உள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், சேர்ந்துள்ள சந்தாதாரர்களின் கணக்கில், இருப்பில் உள்ள தொகைக்கு, ஆண்டுதோறும் வட்டி வழங்கப்படுகிறது. இது தொடர்பாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழகம், ஒவ்வொரு ஆண்டும் வட்டி வீதத்தை அறிவிக்கும். அதிகபட்சமாக, 2010 - 2011ம் ஆண்டு, 9.5 வட்டி அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, கடந்த, 2011 - 2012ம் நிதியாண்டில், 8.25 சதவீதம் வட்டி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, 2012 - 2013ம் ஆண்டிற்கு, 8.60 சதவீதம் வட்டி வழங்கப்பட உள்ளது. இதனால், இத்திட்டத்தில் சேர்ந்துள்ள, ஐந்து கோடி சந்தாதாரர்கள் பயன் அடைவார்கள்.இத்திட்டத்தில் சேர்ந்து, பாதியில் கைவிட்ட சந்தாதாரர்களின் கணக்குகள் செயல்படாமல் உள்ளது. இந்த வகையில் மட்டும், 22 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது. இதிலிருந்து கிடைக்கும் வருவாயை கொண்டு, சந்தாதாரர்களுக்கு, ஒன்பது சதவீத வட்டி அளிக்க முடியும். ஆனால், அதற்கு குறைவாக அளிக்கப்படுகிறது. இதனால், கழகத்திற்கு எவ்வித பற்றாக்குறையும் வராது என, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...