பள்ளிகளில் கழிவறை வசதிகள்: தகவல் திரட்டும் பணி தொடக்கம்

அனைத்துப் பள்ளிகளிலும் கழிவறை வசதிகள் தொடர்பான தகவல்களைத் திரட்டும் பணியை பள்ளிக் கல்வித் துறை தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கழிவறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்த நிலையில், தமிழகப் பள்ளிகளில் கழிவறை வசதிகள் தொடர்பான தகவல்களை பள்ளிக் கல்வித் துறை திரட்டுகிறது.
பள்ளிகளில் கழிவறைகள் தொடர்பாக
இப்போதுள்ள தகவல்கள் முழுமையானதாக இல்லை. இதையடுத்து, கல்வித் தகவல் சார்ந்த மேலாண் முறைமைக்காக பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் தொடர்பான தகவல்களோடு, கழிவறைகள் தொடர்பாகவும் தகவல்கள் திரட்டப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்வித் தகவல் சார்ந்த மேலாண் முறைமைக்கான தகவல்களை வரும் நவம்பர் 30-க்குள் திரட்ட மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் சார்பில் தகவல்கள் திரட்டப்படுகின்றன. 9,10,11,12 வகுப்புகள் உள்ள பள்ளிகளில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் தகவல்கள் திரட்டப்படுகின்றன.
இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் 32 பக்கங்களில் 2 படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளித் தலைமையாசிரியர்கள் இந்தப் படிவங்களைப் பூர்த்திசெய்து ஒன்றை பள்ளியில் வைத்துக்கொண்டு, மற்றொன்றை மாவட்ட அளவிலான அலுவலர்களிடமும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட அளவில் கடந்த 2 நாள்களாகப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
கழிவறைகள்  தொடர்பான தகவல்கள்: பள்ளிகளில் உள்ள கழிவறை வசதிகள், பயன்படுத்தும் நிலையில் உள்ள கழிவறைகள், கழிவறைகள் சுத்தம் செய்யப்படுகின்றனவா, கழிவறைகளுக்கு கதவு உள்ளதா, தண்ணீர் வசதி, மொத்தமாக உள்ள சிறுநீர் கழிப்பிடங்கள், அங்கு கையை சுத்தம் செய்யும் வசதி உள்ளதா, மாற்றுத்திறனுடைய குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் கழிவறைகள் உள்ளதா போன்ற தகவல்கள் திரட்டப்படுகின்றன.
தமிழகத்தைப் பொருத்தவரை கழிவறைகள் இல்லை என்ற பிரச்னை இல்லை. ஆனால், கழிவறைகளில் தண்ணீர் வசதியும் அவை பயன்படுத்தும் நிலையில் உள்ளனவா என்பதும்தான் ஆராயப்பட வேண்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, பல்வேறு யோசனைகளையும் அதிகாரிகள் முன் வைத்துள்ளனர்.
மாணவர்களுக்கு இடைவேளை நேரத்தில் மட்டுமே கழிவறைகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இதன்காரணமாக, அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் சிறுநீர் கழிக்கச் செல்லும்போது போதிய இடமில்லாத காரணத்தால் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கின்றனர்.
இதைத் தவிர்க்க மாணவ, மாணவியருக்குத் தேவையிருக்கும்போது கழிவறைகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கவும் ஆலோசித்து வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்தன
சோப்பு பயன்படுத்த வேண்டும்
சாப்பிடுவதற்கு முன்பாகவும், கழிவறைகளைப் பயன்படுத்திய பிறகும் சோப்பு பயன்படுத்த மாணவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும். அதன்மூலம் 60 சதவீத நோய்கள் வராமல் தடுக்கலாம்.

புத்தகங்களோடு ஒரு சோப்பையும் மாணவர்கள் கொண்டுவர வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் மூலமாக மாணவ, மாணவியருக்கு அறிவுரைகள் வழங்கலாம் என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...