கல்விக்கு உலக வங்கி உதவி

இந்தியாவில் பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக உலக வங்கி சுமார் 500 மில்லியன் டாலர் அளவிற்கு கடன் உதவி அளி்க்க உள்ளது.
இந்தியாவில் பள்ளி உயர்கல்வி திட்டத்தை
மேம்படுத்தும் வகையில் ராஷ்டீரிய மத்யமி்க் சி்‌க்ஷா அபியான் (ஆர். எம்.எஸ். ஏ) திட்டத்திற்கு சுமார் 500 மில்லியன் டாலர் அளவிற்கு கடன் உதவி வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் புதுடில்லியில் வெள்ளி்‌க்கிழமை கையெழுத்தானது.
நிதியமைச்சகத்தின் இணை செயலாளர் பிரமோத் சக்சேனா மற்றும் உலக வங்கிக்கான இந்திய இயக்குனர் ஓனோ ரூல் ஆகியோரிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. உலக வங்கி மூலம் பெறப்படும் நிதி கல்விதுறை வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...