"டெங்கு'வை ஒழிக்க 144 தடை உத்தரவு!

கடலூர் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சலை ஒழிக்கும் நடவடிக்கைக்கு, ஒத்துழைக்காதவர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள, 144 தடை சட்டம், நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.கலெக்டர் ராஜேந்திர ரத்னு, நிருபர்களிடம்
கூறியதாவது:கடலூர் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம், பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. தேங்காய் ஓடுகள், டயர்கள், பிளாஸ்டிக் கப்புகளில் தேங்கியுள்ள தண்ணீரில், டெங்கு கொசு முட்டையிடும். இதை தடுக்க,
பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
மேலும், வாரந்தோறும், வியாழக்கிழமை, முற்பகல், 11:00 முதல், நண்பகல், 12:00 மணி வரை, தொடர்ந்து இந்த விழிப்புணர்வு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது தவிர, செய்தித் தாள், "டிவி' மூலமும், பி.எஸ்.என்.எல்., போனிலும், கலெக்டர் வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ்., போன்றவை மூலம், பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி போன்றவற்றில், விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வீட்டிற்கே, அதிகாரிகள் சென்று, குடும்பத்தினருக்கு காய்ச்சல் உள்ளதா என சோதனை செய்து, சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.அதன்படி, பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். ஒத்துழைப்பு கொடுக்காமல் விதிமுறை மீறும் தனி நபர், கடைக்காரர்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களால், பிறருக்கு ஆபத்து ஏற்படுமானால், அவர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும்.அதற்காக, மாவட்டம் முழுவதும், 144 தடை சட்டம், நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குற்றத் தன்மைக்கேற்ப தண்டனை வழங்கப்படும். அதிகபட்சமாக, இரண்டாண்டு சிறைத் தண்டனை உண்டு.
இதற்காக சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, போலீஸ் துறை ஆகிய அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள், ஒவ்வொரு பகுதியாகச் சென்று பார்வையிடுவர்.
தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.தடை சட்டத்தை அமல்படுத்தி பொது மக்களை தண்டிக்க வேண்டும் என்கிற நோக்கம் இல்லை. 10 பேரில், ஒருவர் மட்டும், சுகாதாரத்தை கடைபிடிக்கவில்லை என்றால், அவரால், மற்றவர்களுக்கும் டெங்கு வர வாய்ப்புள்ளது. எனவே தான், இந்த தடை சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கலெக்டர் ராஜேந்திர ரத்னு கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...