வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 23.37 லட்சம் பேர் மனு: பிரவீண்குமார்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 23.37 லட்சம் பேர் மனு செய்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான
விண்ணப்பங்களை அளிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 20-ம் தேதியுடன் முடிந்தது. மாவட்டத் தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, இறுதிநாள் வரை பெயர் சேர்த்தலுக்காக மட்டும் 23 லட்சத்து 37 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் இணையதளம் மூலம் பெறப்பட்ட 18 ஆயிரத்து 721 விண்ணப்பங்களும் அடங்கும். பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பங்கள் அதிகபட்ச அளவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 630 விண்ணப்பங்களும், குறைந்தபட்ச அளவாக பெரம்பலூர் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 965 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
பெயர் நீக்கலுக்காக 2 லட்சத்து 38 ஆயிரத்து 617 படிவங்களும், பதிவுகளைத் திருத்தம் செய்ய 2 லட்சத்து 66 ஆயிரத்து 225 விண்ணப்பங்களும், பெயரை இடம் மாற்றுவதற்காக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 596 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் இருந்து பெறப்பட்ட அனைத்து படிவங்களையும் கணக்கில் கொண்டு, கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நிறைவடையும்போது, இந்த எண்ணிக்கையில் மாற்றம் இருக்கலாம். அதற்கான பணிகள் இப்போது நடந்து வருகிறது. கம்ப்யூட்டர் பதிவுப் பணி முடிந்த பிறகு, நேரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரிகளால் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.
இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 10-ம் தேதி வெளியிடப்படும் என்று பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...